இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

மன்னார் கடற் பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ உத்தரவு பிறப்பித்துள்ளார் .

illegal-migration_0

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டு சுகவீனமுற்றுள்ள இந்திய மீனவரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தும் படியும் பதில் நீதவான் சிறைச்சாலை உத்தியோகத்தரு கட்டளை பிறப்பித்தார்.

கடந்த 13.10.2015 அன்று மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக நான்கு இந்திய இளுவைப் படகுகளில் வந்த மூன்று சிறுவர்கள் உட்பட இருபத்தி நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இவர்களை மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்திய போது மூன்று சிறுவர்களையும் மன்னார் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் அன்னை இல்லத்திலும் ஏனையோரை விளக்க மறியலிலும் வைக்கும்படி நீதவான் உத்தரவு பிறப்பித்த நிலையில் இவர்களை இன்று புதன் கிழமை (28) மன்னார் நீதிமன்றில் பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை அதிகாரி எஸ்.வளன் ஆஐர்படுத்தியதோடு ஏனைய இந்திய மீனவர்களையும் சிறைச்சாலை அதிகாரிள் ஆஐர்படுத்தினர்.

சிறுவர்களை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்பிலும் ஏனைய இந்திய மீனவர்களை தொடர்ந்து எதிர்வரும் 11.11.2015 வரை விளக்க மறியலில் வைக்கும்படி பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ கட்டளையிட்டார்.

அதேவேளையில் முத்துக்கறுப்பன் முனியசாமி (60) என்ற இந்யதி மீனவர் சுகயீனமுற்ற நிலையில் மன்றில் நிற்க முடியாத நிலையில் இருந்ததை பதில் நீதவான் கண்ணூற்றதும் அவரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு இட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.


*