காத்தான்குடி அபிவிருத்திக் குழு கூட்டம்

unnamed

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று 14.07.2017 வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.

அத்தோடு திணைக்கள உயர் அதிகாரிகள் வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட குழுக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக காத்தான்குடியிலுள்ள வீதிகள் அரசாங்கத்தினூடாக செப்பனிடப்படவுள்ளதாகவும் கூடுதலான அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

-ஹம்ஸா கலீல்-

Leave a comment

Your email address will not be published.


*