காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

 

-எம் எச் எம் அன்வர்-

காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு  நாளை   03.11.2017 வெள்ளிக்கிழமை  பி.ப 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக தெரிவிப்பு.

1911 ஆம் ஆண்டு காத்கான்குடியில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாக கருதப்படும் அல்ஹிறா மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பலர் இன்று கல்விமான்கள் அறிஞர்கள் உயர்பதவிகள் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் என நல்ல நிலைமைகளில் காணப்படுகின்றனர்

இப்பாடசாலையின் அதிபர் ஏ. ஜி. எம். ஹக்கீம் உப அதிபர் என் எம் அமீன் மற்றும்   ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் கல்வியிலும் ஏனைய புறக்Pர்த்திய விடயங்களிலும் பல பெறுபேறுகளையும் பல சாதனைகளையும் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் பெற்று வருவதுடன் க.பொ.(சா.த) மற்றும் க.பொ.த.உ.தரத்தில் சிறப்பான பெறுபேறுகளையும் அண்மைக்காலமாக பெற்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது

இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் அரப்பணிப்புடனான சேவையும் இதற்கு ஒரு காரணமாகும் எனவும் மாணவர்களின் ஒழுக்கவிழுமியங்கள் கல்வி செயற்பாடுகள் மிகச் சிறப்பாக அமைவதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பும் காணப்படுவதாக இப்பாடசாலை அதிபர் ஏ. ஜி. எம். ஹக்கீம் தெரிவித்தார்

காத்தான்குடியில் ஆண் பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு பலமான ஒரு பழைய மாணவர் சங்கம் ஒன்று அவசிய தேவையாகவிருப்பதால் அதற்கான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 03.11.2017 வெள்ளிக்கிழமை 4.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதுடன்

மேற்படி நிகழ்வுக்கு அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொண்டு பாடசாலையை மேம்பாட்டுக்கு  மேலான ஆலோசனைகளையும் சிறப்பாக செயற்படக் கூடிய பழைய மாணவர் சங்கம் ஒன்றினை அமைக்க ஒத்துழைப்பு நல்குமாறு அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சார்பாக அழைப்பதாக அதிபர் மேலும் தெரிவித்தார்  

 

Leave a comment

Your email address will not be published.


*