காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

-எம். எச். எம். அன்வர்-

வரலாறு காணாத பழைய மாணவர்கள் பங்குபற்றிய காத்தான்குடி அல்ஹிறா பழைய மாணவர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் ஏ ஜி எம் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது

அதிபர் தனது தலைமையுரையில்

இதற்கு முன்னர் கூட்டப்பட்ட ஒரு சிலரே சமூகமளித்தருந்த பழைய மாணவர் சங்க தெரிவானது இம்முறை சனத்திரள்மிக்க பழைய மாணவர்கள் மேற்படி  சங்க அங்குரார்ப்பண நிகழ்வுக்கு சமூகமளித்திருப்பதை பார்க்கும்போது இப்பாடசாலை மீதுள்ள அக்கரையையும்; கல்விக்காக நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் மேலும் பரைசாட்டுவதாக தெரிவித்தார்

1911ம் ஆண்டு காத்தான்குடியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகவும் நான் கற்ற பாடசாலையாகவும் திகழும் இப்பாடசாலையை பல வழிகளிலம் முன்னேற்ற பாடுபடுவேன் என்பதுடன் மேலும் இப்பாடசாலையை மேம்படுத்த செயற்திறன்மிக்க பழைய மாணவர் சங்கம் ஒன்று அமைய வேண்டும் எனவும் என்னை வேறு பாடசாலைக்கு இடமாற்றுவதற்கு பலர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்

அத்துடன் 1992;ம் ஆண்டு இப்பாடசாலையில் கல்;வி கற்ற க.பொ.த சா.த மாணவர்கள் பல வழிகளிலும் இப்பாடசாலையின் உயர்ச்சிக்கு உதவிவருகின்றனர் அவர்களை நான் என்றும் மறக்க முடியாது இதே போல் ஏனைய பழைய மாணவர்களும் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்

இஸ்லாமிய பார்வையில் பழைய மாணவர்களின் பங்களிப்பு  பாடசாலைக்கு எவ்வாறு அமைய வேண்டும் எனும் தொனிப்பொருளில் அஷ்ஷெய்ஹ் எம் பி எம் பிர்தௌஸ் நளீமி இங்கு சிறப்புரையாற்றினார்

இங்கு உரையாற்றிய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் எம் டி அஸ்மி தாஜூதீன் தனதுரையில்

பழைய மாணவர்களாகிய நாங்கள் எங்களால் முடிந்த பணிகளை செய்துள்ளோம் குறிப்பாக எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை அழைத்து கௌரவித்துள்ளோம்  அவர்கள் பல கஷ்டங்களுக்கும் கடன் பழுக்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களிடம் கற்ற நாங்கள் நல்ல நிலையில் இருப்பதால் அவர்களுக்கு என்றும் உதவ கடமைப்பட்டுள்ளோம் எனத்தெரிவித்தார்

இதில் 25 பேர் கொண்ட நிருவாக தெரிவு இடம்பெற்றதுடன் தலைவராக அதிபர் ஏ ஜி எம் ஹக்கீம் அவர்களும் செயலாளராக அஸ்மி தாஜூதீன் உப செயலாளராக எம் பி எம் சப்ரி பொருளாளராக திருமதி றமீஸா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர் கொழும்பில் வசிக்கும் பழைய மாணவர்களுக்காக டொக்டர் எம் ஐ எம் ஹபீப் முகம்மட் அவர்களும் கட்டாரில் வசிக்கும் பழைய மாணவர்களுக்காக ஏ எல் எம் அஷ்ரப் அவர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்

எதிர்காலத்தில் இப்பாடசாலையை பல வழிகளிலும் முன்கொண்டு செல்ல திடசங்கட்பம் கொண்டுள்ளதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வழியுறுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published.


*