சம்மாந்துறை பத்ர் – ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி உதவி 

IMG_0963(ஆர்.ஹஸன்)
சம்மாந்துறை பத்ர் – ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிவாசல் நுழைவாயில் வெளிச்சக்கூரையை புனர்நிர்மாணம் செய்வதற்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஏழரை இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பத்ர் -ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் குறித்த பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்திருந்தார். 
IMG_0963
அங்கு லுஹர் தொழுகையை நிறைவேற்றிய அவர், பின்னர் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, பாவனைக் காலம் முடிந்தும் நீண்ட காலம் புனர்நிர்மாணம் செய்யப்படாமல் இருக்கின்ற பள்ளி நுழைவாயில் வெளிச்சக் கூரையைத் திருத்தித் தருவமாறு  பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹீம் மற்றும் செயலாளர் அல்ஹாஜ் கே.எல்.அல்-அமீன் உள்ளிட்ட பத்ர் -ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிநிர்வாக சபை இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது. 
IMG_0962
இக்கோரிக்கையை ஏற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஏழரை இலட்சம் ரூபாவினை குறித்த பள்ளிவாசலுக்கு வழங்கி வைத்தார்.
IMG_0964
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வரும் இராஜாங்க அமைச்சர், தமது பள்ளிவாசலுக்கு உதவி செய்தமைக்காக  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பத்ர் – ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்தது. 
IMG_0965
IMG_0966

Leave a comment

Your email address will not be published.


*