சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னனியில் கண்டேன் இல்மி அஹமட் லெவ்வை

(NFGG ஊடகப் பிரிவு)

சமூக மதிபீட்டுக்கான நிறுவனத்தின் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான ஜனாப் இல்மி அஹமட் லெவ்வை BA அவர்கள் நல்லாட்சிக்கான தேசியமுன்னணியில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டார். காத்தான்குடியில் நேற்று (06.11.2017) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த இணைவுபற்றி அறிவிக்கப்பட்டது.

காத்தான்குடியில் நீண்டகால அரசியல் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஜனாப் இல்மி அஹமட் லெவ்வை மிக நீண்ட காலமாக காத்தான்குடி பிரதேசஅரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவராவார். காத்தான்குடி OSA எனப்படும் சமூக மதிப்பீட்டுக்கான நிறுனத்தை ஆரம்பித்து நலிவுற்ற மக்களின் நலனுக்காகஅர்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு இணைந்து கடந்த பொதுத் தேர்தலின் போது நெருக்கமாகப் பணியாற்றிய இவர் NFGGயின் முற்போக்கான, நாகரீக,கொள்கைசார் அரசியல் செயற்பாடுகளின் பால் ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். இந்தப் பின்னணியிலேயே தற்போது NFGGயின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுஅதன் அரசியல் வேலைத்திட்டங்களில் நேரடியாகப் பங்கு கொள்ளும் வகையில் அக்கட்சியோடு உத்தியோக பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்த இணைவு தொடர்பான அறிவித்தலை செய்வதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப் பொன்றினை நேற்று காத்தான்குடியில் NFGG ஏற்பாடு செய்திருந்தது.
NFGGயின் தவிசாளர் பொறியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் OSA நிறுவனத்தின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை, அதன்பொருளாளர் அல்ஹாஜ் எம்.எம் .எம்.தாஹிர் ஜே.பி, உப செயலாளர் எம்.எப்.எம்.சாதிர் (ஜமாலி) , சிரேஸ்ட உறுப்பினர் எம்.எஸ் அப்துல் கபூர் ஒஸா நிறுவனத்தின்முக்கியஸ்தர் அல்ஹாஜ் A.C.C முகமட் (அபுல் ஹசன்) , அல்ஹாஜ்.A.L.M. ஜௌபர் ஜே.பி. மற்றும் அத்தோடு NFGGயின் பிரதி தவிசாளர் சிறாஜ் மசூர், அதன் தேசியஅமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நழீமி, காத்தான்குடி பிரதேச ஆலோசனை சபை செயலாளர் MACM.ஜவாஹிர், NFGGயின் சிரேஸ்ட உறுப்பினர் அமீரலி ஆசிரியர், NFGGயினர் ஏறாவூர் பிரதேச செயற்குழு பொறுப்பாளர் MLM.சஹைல் ஆசிரியர் மற்றும் இல்மி அஹமட் லெவ்வையின் தந்தையாரும் முன்னாள் பட்டினாட்சி மன்றஉறுப்பினருமான மூன்றாம் வாட் அஹமட் லெவ்வை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது NFGGயின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கான அங்கத்துவப் படிவத்தினை NFGGயின் தவிசாளர் அவர்களிடம் இல்மி அஹமட் லெவ்வை அவர்கள்கையளித்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதன் போது உரையாற்றிய இல்மி அஹமட் லெவ்வை அவர்கள்.
“இந்த சமூகத்தின் விடிவுக்கான அரசியலில் நான் கடந்த காலங்களில் சில படகுகளில் பயணித்திருக்கின்றேன். அதன்போது பல கசப்பான அனுபவங்களைகண்டிருக்கிறேன். அவை பாதுகாப்பான படகுகள் என மக்கள் நம்பினாலும் அதில் பல பாதகமான ஓட்டைகள் இருப்பதனை நான் கண்டேன். இந்த சமூகத்திற்குப்பாதுகாப்பான அரசியல் வழி எது என நான் தேடினேன். அதற்கான சிறந்த வழி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பதனை நான் தெரிந்து கொண்டேன். அவர்களின்சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதனைக் கண்டேன். முன்மாதிரியான தலைமைத்துவ ஒழுங்கைக் கண்டேன். அதன் அடிப்படையிலேயே இக்கட்சியில் நான்இணைந்து கொள்கிறேன். காத்தான்குடி பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று இதன் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து N FGயின் வெற்றிக்காக முழு அர்ப்பணிப்போடுசெயலாற்றுவேன் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இக்கட்சி சார்பாக போட்டியிடும் விருப்பத்தைக் கொண்டுள்ளேன். அதன் மூலம் மக்களின் அங்கீகாரமும்அரசியல் அதிகாரமும் எனக்கு கிடைக்குமாக இருந்தால் இன்னும் அதிகமாகவும் வேகமாகவும் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன்” எனவும் தெரிவித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித் பொறியியலாள் அப்துர் ரஹ்மான் அவர்கள்,
“இல்மிஅஹமட் லெவ்வை அவர்களை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறோம். இப்பிரதேசத்தில் இன்னும் தீவிரமாக மக்களுக்கான அரசியல்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது பெரும் உதவியாக இருக்கும். தேர்லுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற பொதுவான நடை முறை எமது கட்சிக்குஇருக்கிறது. அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளை தற்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில்இன்று எம்மோடு இணைந்து கொள்ளுகின்ற இல்மி அஹமட் லெவ்வை அவர்களும் இந்த தெரிவு நடைமுறையில் உள்வாங்கப்படுவார்கள் என நம்புகின்றோம்.”

Leave a comment

Your email address will not be published.


*