ஜெயலலிதாவின் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமி காலமானார்

choramaswamy-joins--600-29-1480411588-07-1481072904

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார். துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சோ ராமசாமி. அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். இன்று அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் காலமாகியுள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இல்லத்தில் சோ ராமசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. so/ton

cho-jaya34-07-1481082618

Leave a comment

Your email address will not be published.


*