திருமலையில் இடம்பெற்ற NFGG யின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள்

IMG-20170716-WA0009(NFGG ஊடகப்பிரிவு)
 
நல்லாட்சிக்கான தேசிய  முன்னணி(NFGG)யின் இரு வேறு மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நேற்று (15.07.2017) திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்றன.

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,  அதன் பிரதித் தவிசாளர் சிறாஜ் மசூர் மற்றும் அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் Dr,KM சாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரைகளை ஆற்றினர்.
IMG-20170716-WA0009
 
NFGG யானது தேசிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பரவலாக மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. அந்த வகையிலேயே நேற்றைய திருகோணமலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
 
கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பானது கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் பிற்பகல் 04.30 மணி முதல் மாலை 06.45 மணிவரை நடை பெற்றது. NFGG யின் திருகோணமலை செயற்குழு உறுப்பினர் AR முபீத் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் NFGG யின் கிண்ணியா பிரதேச செயற்குழு உறுப்பினர்களான MM நஸ்றுதீன், AA சாஜிர் மற்றும் மௌலவி முஹம்மட் பஸீர் உள்ளிட்ட பலரும்; கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
IMG-20170716-WA0005
 
அதே போன்று NFGG யின் மூதூர் பிரதேச நிகழ்வானது மாலை 07.30 மணி முதல் இரவு 09.15 மணிவரை மூதூர் CCCD மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் Dr.KM சாஹிர் தலைமை தாங்கியதோடு மூதூர் பிரதேச செயற்குழு உறுப்பினர்களான MSM சாபி நழீமி, MS கஸ்ஸாலி ஆசிரியர், LM  சிப்லி ஹஸன், AH மிஸ்றுல் ஹாபி M. றினூஸ், NM றினூஸ் மற்றும் IM ஜெஸ்மி  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
IMG-20170716-WA0007
 
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ஹலீம் இஸ்ஹாக் உள்ளிட்ட கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களைச் சேர்ந்ந உலமாக்கள் ஆசரியர்கள் புத்தி ஜீவிகள் சமூகப் பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வுகளின் இறுதியில் தமது கருத்துக்களையும் அவர்கள் தெரிவித்தனர்.
IMG-20170716-WA0011
 
சமூகத்தில் அரசியல் எவ்வாறான ஒரு பாதையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை வடிவத்தை NFGG செய்து வருவதற்கு நன்றி தெரிவித்த அவர்கள் இக்கட்சியை தொடர்ந்தும் வளர்த்தெடுப்பதற்கான தமது பங்களிப்பினை தொடர்ந்து வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
IMG-20170716-WA0010
IMG-20170716-WA0012

 

Leave a comment

Your email address will not be published.


*