பிரதி அமைச்சர் அமீர் அலி என்பவர் யார்.? சாட்டோ மன்சூர்……….

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

மங்கிப் போன புரட்சியின் மேல், மீண்டுமோர் காலை வெளிச்சம்,பிரதி அமைச்சர் அமீர் அலி,
சாட்டோ – சரீப் அலி ஆசிரியர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த சமூகத்திற்கு பணியாற்றியோர்கள்,தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் கௌரவிப்பு விழாவானது கடந்த 12.11.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.


கடந்த காலங்களில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் ஏனைய அரசியல் நடவடிக்கைகளை மிகவும் காரசாரமாக விமர்சித்து வந்த சமூக ஆர்வலரும் முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ வை.எல். மன்சூர் தற்பொழுது பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராக கல்குடா தொகுதியில் செயற்பட்டு வருகின்றார்.

அதனடிப்படையில் தற்பொழுது சாட்டோ மன்சூர் கல்குடா பிரதேசத்துக்கு அரசியல் தலைவனாக இருப்பதற்கு பிரதி அமைச்சர் அமீர் அலிதான் தகுதியானவர் என பரவலாக விழாக்களில் உரையாற்றியும், பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் செம்மண்ணோடை அல்- ஹம்றா வித்தியாலய விழாவில் அமீர் அலி என்பவர் யார்? அவர் எதற்காக அரசியலுக்கு வந்தார்.? அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் எவ்வாறான அக்கறையுடன் கல்குடா சம்பந்தமாக செயற்பட்டு வந்தார்., கல்குடா முஸ்லிம்களினுடைய காணி நில புலங்கள் சம்பந்தமாக அமீர் அலியின் முன்னெடுப்புக்கள், பங்கு எவ்வாறு அமைந்துள்ளது என நீண்ட உரையினை உணர்ச்சி பூர்வமாகவும், மக்களை தெளிவுபடுத்தும் வகையிலும் உரையாற்றினார்.

சாட்டோ வை எல் மன்சூரின் நீண்ட உரையின் விரிவான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*