புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலாநிதி ஜயம்பதியுடன் NFGG கலந்துரையாடல்!

 
(NFGG ஊடகப் பிரிவு)
அரசியலமைப்பு நிபுணரும் புதிய அரசியலமைப்பு வரைஞர் குழுவின் முக்கியஸ்தரும், வழிப்படுத்தல் குழுவின் அங்கத்தவருமான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதிஜயம்பதி விக்ரமரட்ணவுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (08.11.2017) புதன் மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டது.
அரசியலமைப்பு தொடர்பில்ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராகக் கடமையாற்றிய சட்டத்தரணி லால் விஜேநாயக்க அவர்களும் இக்கலந்துரையாடலில்பங்கேற்றிருந்தார்.
இந்த சந்திப்பு ராஜகிரியவிலுள்ள ஐக்கிய இடதுசாரி முன்னணியின் (United Left Front) தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்தவிசாளர் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோர் பங்கேற்றனர்.
தற்போது அரசியலமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய விடயங்கள், சிறுபான்மை சமூகங்களது அபிலாசைகளை உள்ளடக்குதல், அதில்எதிர்கொள்ளும் சிக்கல்கள், பரந்துபட்ட இலங்கையரின் அபிலாசைகளை உள்ளடக்குவதற்கு ஏற்ற பொறிமுறைகளை உள்ளடக்குதல் என இது சம்பந்தமாக பலதரப்பட்டவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன
இது போன்ற சந்திப்புகளை தொடர்ந்தும் நடத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 

Leave a comment

Your email address will not be published.


*