பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு  பிரியாவிடையும் கௌரவிப்பும்

989f6f88-2089-42e5-bdab-e77df69c92e3
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஏற்பாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி. வெதகெதரவின் பணிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல் மனால் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் எஸ.எச்.எம்.அஸ்பர் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததார். 
989f6f88-2089-42e5-bdab-e77df69c92e3
இதன்போது, இராஜாங்க அமைச்சரால் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி. வெதகெதரவுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் – பரிசில்களும் வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது. 
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் ஏ.எல் அப்துல் ஜவாத், ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் செயலாளர் ஏ.எல்.எம் மும்தாஸ் (மதனி), முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம் பரீட் ஜே.பி., இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
c9f8fd3b-8f65-47e0-8c62-9cadf8f5c05b

Leave a comment

Your email address will not be published.


*