வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் பிரதம அதிதியாக ஜாமிஆ நளீமியா செதுக்கிய நீதிபதி றிஸ்வான்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வாழைச்சேனை வை.அஹமட் ஆரம்ப பாடசாலையில் இந்த ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 24 மாணவர்களுடன் சேர்த்து 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள் அனைவரையும் பாராட்டி கெளரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய பல்கலைகழகம் செதுக்கி கல்குடாவிற்கு வழங்கிய மாவட்ட நீதிபதி அல்-ஹாஜ் எம்.ஐ.என்.றிஸ்வான் கலந்து சிறப்பித்தமை எல்லோருடைய கவனத்தினை ஈர்த்த விடயமாகவும், சிறப்பம்சமாகவும் இருந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

 

முற்று முழுதாக சமூகத்தின் பங்களிப்புடனும், சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல் மன்சூர், ஓட்டமாவடி நியாஸ் ஹாஜி, விஜிதா அன்வர் ஆகியோர்களின் அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த கெளரவிப்பு நிகழ்விற்கு இன்னுமொரு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மத்தி கல்வி வலய பணிப்பாளர் ஜனாப் இஸ்ஸதீனும் கலந்து சிறப்பித்ததோடு, உதவி கல்வி பணிப்பாளர்கள், பிரதி கல்விபணிப்பாளர்கள்,  பிரதேசத்தில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், என பலரும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் என்.எம்.ஹஸ்சலியின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சமகாலத்தில் சிறுவர்களும், மாணவர்களும் எதிர்கொள்கின்ற சமூக ரீதியான பிரச்சனைகள், துஸ்பிரயோகங்களில் இருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்துக்கொள்வது,? அது தொடர்பான சட்ட திட்டங்கள் நாட்டில் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது.? அதற்கு பெற்றோர்கள் எவ்வகையான அறிவுறுத்தல்களை தமது பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.?என்பது சம்பந்தமான அறிவுபூர்வமானதும், சமகாலத்துக்கு தேவையானதுமான உரையினை பிரதம அதிதியும் நீதிபதியுமான அல்-ஹாஜ் றிஸ்வானினால் வழங்கப்பட்டது.

பிரதம அதிதியாக ஜாமிஆ நளீமியா செதுக்கிய நீதிபதி றிஸ்வான் கலந்து சிறப்பித்த குறித்த மாணவர்களின் கெளரவிப்பு விழாவின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published.


*