வெள்ளி விழாக்கானும் காத்தான்குடி முதியோர் இல்லம் பிரதம அதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இல்லத்தின் தற்போதைய நிர்வாகம் அதன் வெள்ளி விழாவினை எதிர் (10.11.2017 வெள்ளி) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்காகான சகல ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக இல்லத்தின் ஆயுட்கால தலைவர் தேசமாணிய சட்டத்தரணி எம்.ஜ.எம்.நுார்தீன் தெரிவித்தார்.

5 ம்பெரும் அங்கங்களாக வெள்ளி விழா நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதாக  உப தலைவர்களில் ன ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் கே.எம்.ஏ.அஸீஸ்  இதன் போது தெரிவித்தனர்.

  1. முதியோர் இல்லத்திலான சிரமதானம்.
  2. கத்தமுல் குர்ஆன். விசேட துஆ பிரார்த்தனை (முதியோர் இல்ல வளாக பள்ளிவாயலில்)
  3. வெள்ளிவிழா நிகழ்வுகள் (ஹிஸ்புல்லா மண்டபம்)
  4. விசேட மலர் வெளியிடு ” காப்பகம்.”
  5. செரண்டிப் முஸ்தபா குழுவினரின் கலை நிகழ்வுகள்.

மேற்படி நிகழ்வில் பொது மக்கள் சகலரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர். 


Leave a comment

Your email address will not be published.


*