அரசியல் காய் நகர்த்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்அமைப்பாளர் றியாலை முந்திய ஓட்டமாவடி ஹனீபா (மம்மலி) விதானை

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

கல்குடா செம்மண்ணோடை அல்-ஹம்றா பாடசாலையில்  (19.11.2017 ஞாயிறு) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்அமைப்பாளர்  எச்.எம்.எம் றியால் முன்னிலையில்

பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளியும், ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் இணைத்தலைவருமான ஹனீபா (மம்மலி) விதானை மூன்று இலட்சம் ரூபாய்களை பாடசாலையின் சுற்று மதில் கட்டுவதற்காக உடனடியாக தருவதாக  பகிரங்கமாக கொடுத்த வாக்குறுதியானது அரசியல் ரீதியாக மம்மலி விதானையின் காய் நகர்த்தலினையும், அவர் பிரதேச , சமூக ரீதியாக அவர் வைத்திருக்கும்  ஈடுபாட்டினை எடுத்துக்காட்டும் விடயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.

பாடசாலையின் அதிபதிபர் எம்.எஸ்.சுபைதீன்  உரையாற்றும் பொழுது அமைப்பாளர் றியாலிடம் பாடசாலைக்கு தேவையாக உள்ள சுற்றுமதில், மற்றும் தேவையாக உள்ள மூன்று மாடியுடனான ஆராதனை மண்டபத்தினை  ஸ்ரீ லங்கா முச்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துரைத்து பெற்றுத்தருமாறு வைத்த வேண்டுகோலினை செவி மடுத்த ஹனீபா (மம்மலி) விதானை மெற் கூறியவாறு தனது வாக்குறுதியினை உடன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்து அதனை பகிரங்கமாக அதிபர் சுபைதீன் மூலம் குழுமியிருந்த மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

 

அது மட்டுமல்லாமல் குறித்த நிகழ்வான முன்பள்ளி மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்விற்கு தனது பூரண அனுசரணையினை வழங்கிய ஹனீபா விதானை பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சியிலும், சமூக சேவையிலும்  பெரும் பங்காற்றிவருது முக்கிய விடயமாகும். அத்தோடு குறித்த நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக அக்கீல் டயர் வியாபார தள உரிமையாளர் ஏ.எல்.எம்.நியாஸ் ஹாஜி, கல்குடா தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பளர் சபீர் மெளலவி, கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் மொஹம்மது ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பிரதம அதிதியாக உரையாற்றிய அமைப்பாளர் றியால் பாடசாலையின் அதிபர் முன்வைத்த வேண்டுகோல்களையும், ஏனைய அபிவிருத்திகளையும் மேற்கொள்வது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் பாடசாலை நிருவாகத்துடன் கலந்தாலோசித்து எதிர் காலத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

 

 

நிகழ்வின் முக்கிய விடயமாக கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பாடசாலைக்கு உடனடி தேவையாக உள்ள காணியினை கொள்வனவு செய்வதற்காக பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட நிதியினை கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட காணியின் உறுதியினை உத்தியோக பூர்வமாக பிரதேச கல்வி அபிவிருத்தி குழுவின் தலைவர் ஜிப்ரியினால் பாடசாலை நிருவாகத்திடன் அதிதிகள் சகிதம் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*