Breaking News

NFGG  நடாத்திய விசேட மக்கள் சந்திப்பு! ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

IMG-20170715-WA0005(NFGG  ஊடகப் பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்(NFGG ) விசேட மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நேற்று (14.07.2017) காத்தான்குடியில் இடம் பெற்றன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒரு தேசிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்பட்ட முதலாவது இம்மக்கள் சந்திப்பு நிகழ்வானது காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள NFGG  யின் பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது.
IMG-20170715-WA0000
NFGG யின் மகளிர் பிரிவினால் பெண்களுக்கென ஏற்பாடு செய்யபட்பட்ட பிரத்தியேக நிகழ்வு பிற்பகல் 04.30 மணிக்கும் ஆண்களுக்கான நிகழ்வு இரவு 08.00 மணிக்கும் இடம் பெற்றன.
IMG-20170715-WA0002
இந்நிகழ்வுகளில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பிரதித்தவிசாளர் சிறாஜ் மசூர்  தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழ்லுல் ஹக் மற்றும் MACM ஜவாஹிர் ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினர்.
 IMG-20170715-WA0005
கடந்த 11 வருடங்களில் கடந்து வந்த பாதையின் அனுபவங்களை இலக்கியத்தோடு மீட்டிப் பார்க்கும் விசேட கவிதையொன்றினை NFGGயினர் ஸ்தாபக உறுப்பினர் வித்யாகீர்த்தி அமீரலி ஆசிரியர் வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களும் தமது கருத்துக்களை வழங்கினர்.
IMG-20170715-WA0020
ஆண்களும் பெண்களும் என ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு இரவு 11.00 மணியளவில் இராப்போசனத்துடன் நிறைவு பெற்றது.
IMG-20170715-WA0021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

_86972630_gettyimages-459218004

பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமியின் வயிற்றில் 26 வாரங்கள் வளர்ந்த கரு இருப்பதாக தெரிவிப்பு

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதால் கருவுற்ற 10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக் கோரி, அவரது பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.