ஃபில் சிம்மன்ஸ் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

phil-simmons-14-1473845923

ஜமைக்கா: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஃபில் சிம்மன்ஸ் திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணியில ஒரு காலத்தில் அசத்தலான வீரராக வலம் வந்தவர் சிம்மன்ஸ். தற்போது அவர் பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவரை பதவியிலிருந்து தூக்கி விட்டது மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்.

அவரது அணுகுமுறை பழையதாக இருப்பதாகவும், புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் சிம்மன்ஸுக்கு விடை கொடுப்பதாகவும், சிம்மன்ஸின் சேவைகளை வாரியம் மறக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் ஆடியது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. இது சிம்மன்ஸ் பதவி போக முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. அதேசமயம், கடந்த ஏப்ரலில் நடந்த 20-20 உலகக் கோப்பைத் தொடரில் சிம்மன்ஸ்தான் பயிற்சியாளராகர இருந்தார். அவரது ஊக்கத்தால் அணி கோப்பையை வென்று வரலாறு படைத்தது என்பது நினைவிருக்கலாம்.

Leave a comment

Your email address will not be published.


*