அன்வர் மற்றும் ஜாமியுள் ஆபிரீன் பாடசாலைகளுக்கு தலா 2 கோடி ரூபா பெறுமதியுடைய கட்டடங்களை பெற்றுக்கொடுத்தார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

HRS_9803ஹைதர்அலி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட, காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் பற்றாக்குறையாகக் காணப்பட்ட தளபாடங்களை பெற்றுத்தருமாறும் மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடாகக் காணப்பட்ட மலசலகூட வசதிகளையும் ஏற்படுத்தித் வழங்குமாறும் பாடசாலை நிருவாகத்தினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக பாடசாலைக்கான தளபாடங்களை தனது சொந்த நிதியிலிருந்து பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கியிருந்தார்.

HRS_9866

மேலும் மலசலகூட வசதியினை அமைப்பதற்காக பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அன்வர் வித்தியாலயத்திற்கான மலசலகூட வசதியினை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அதற்கான கட்டுமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும் பாடசாலையில் தற்போதுள்ள வகுப்பறைகள் போதாமை காரணமாக மாணவர்கள் மிகவும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.

HRS_9785

இதற்கென மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் அவர்களின் மூலம் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கென சுமார் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் வாரத்திற்குள் இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்று மிக விரைவில் கட்டுமான வேலைகள் நடைபெறவுள்ளன.

HRS_9819

நடைபெற்றுக்கொண்டிருக்கும் மலசலகூடத்திற்கான கட்டுமானப் பணிகளையும் மற்றும் பாடசாலையின் மேலதிக பௌதீக வளங்களுக்கான தேவைகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அன்வர் பாடசாலைக்கு 2016.11.02ஆந்திகதி (புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். 

HRS_9850

எதிர்வரும் காலங்களில் பாடசாலையின் மைதானத்தினை புனரமைப்பு செய்வதற்கும் சுற்றுச் சூழலினை அழகுபடுத்துவதற்குமான நிதிகளை ஒதுக்கி வழங்குவதற்கும், பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இதன்போது பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

HRS_9915

இதனைத்தொடர்ந்து காத்தான்குடி ஜாமியுள் ஆபிரீன் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தன்னிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைவாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மலசலகூட கட்டட பணிகள் மற்றும் தளபாட திருத்த வேலைகள் என்பவற்றை பார்வையிட்டதோடு,

HRS_9893

மாகாணசபை உறுப்பினரின்  வேண்டுகோளுக்கமைவாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் அவர்களினூடாக ஜாமியுள் ஆபிரீன் வித்தியாலயத்திற்கும் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

HRS_9850

HRS_9874

HRS_9830

Leave a comment

Your email address will not be published.


*