இனவாதத்தால் ஈரோ 2016 ஆட்டத்தில் தான் விலக்கப்படுவதாக கரீம் பென்ஜீமா குற்றச்சாட்டு

151201155040_karim_benzema_512x288_reuters_nocredit

பிரான்சின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கரீம் பென்ஜீமாஇ தேசிய கால்பந்துக் குழுவின் மேலாளர் இனவாதிகளுக்கு தலைவணங்கி யூரோ 2016 கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள அணியில் இருந்து தன்னை விலக்க முடிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதுள்ள எந்த பிரெஞ்சு கால்பந்து விளையாட்டு வீரரைக் காட்டிலும் பென்ஜீமா பிரான்சுக்கு அதிக கோல்களைப் போட்டவராவார்.

ஆனால் தனது குழுவை சேர்ந்த வீரருக்கு பாலியல் ஒலிநாடா ஒன்றை வைத்து மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.

151201155040_karim_benzema_512x288_reuters_nocredit

பென்ஜீமா தனக்கு இந்த விவகாரத்தில் தனது ஈடுபாடு இருந்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். அவர் கடந்த ஆண்டு தேசிய அணியில் இருந்து இடை நீக்கப்பட்டார்.

ஆனால் ஸ்பெய்ன் சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்இ பிரான்சில் அதிகரித்து வரும் இனவாத அரசியல் கட்சிகளின் செல்வாக்கால்தான் தனது தொடர் விலக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் மிரட்டல் குறித்த குற்றச்சாட்டால் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்புக்காக அவர் விளையாடுகிறார்

Leave a comment

Your email address will not be published.


*