ஒலிம்பிக்ஸ்இப்படியும் வெல்லலாம்: ஷாவ்னே மில்லரின் சாகசம்

160816022907_shaunae_miller__624x415_ap_nocredit

2016 ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதி போட்டியில், பஹாமாஸைச் சேர்ந்த ஷாவ்னே மில்லர் வியத்தகு முறையில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மிகவும் பரபரப்பான இறுதி தருணங்களில், முதலில் தடுமாறிய மில்லர் வெற்றி கோட்டின் மீது தாவி விழுந்து இலக்கை அடைந்தார். இதன் மூலம், அமெரிக்காவின் அலிசன் ஃபெலிக்ஸை அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளினார்.

வியத்தகு முறையில் பந்தைய தூரத்தை கடந்த ஷாவ்னே மில்லர், 49.44 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றார்.

160816022907_shaunae_miller__624x415_ap_nocredit
49.51 வினாடிகளில் இலக்கை அடைந்த அலிசன் ஃபெலிக்ஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
மூன்றாவது வந்த ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

22 வயதாகும் மில்லர் இது குறித்து கூறுகையில், ”தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இலக்கை அடைய, நான் தரையில் தாவி விழுந்தது அதற்கு பிறகு தான் எனக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் , ”போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக நடந்த ஒரு இயல்பான எதிர்வினை இது” என்று கூறினார்.

so.b/ta

Leave a comment

Your email address will not be published.


*