காட்டு யானை தாக்கியதில் இரு வயோதிபர்கள் படுகாயம் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம்

 

maxresdefault(ஏறாவூர் நிருபர்.எஸ்.அப்துல் கபூர்)

காட்டு யானை தாக்கியதில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி 1 மற்றும் சித்தாண்டி 3 ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரு வயோதிபர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 1 காளிகோயில் வீதியைச் சேர்ந்த பிள்ளையான் சாமித்தம்பி (60 வயது) மற்றும் பெருமாவெளி ஈரலக்குளத்தைச் சேர்ந்த எஸ். செல்லத்தம்பி (72 வயது) ஆகியோரே

கால்கள் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மாடு மேய்ப்பவரான பிள்ளையான் சாமித்தம்பி என்பவர் முறாக்கமடு எனும் காட்டுப் பகுதியில் தனது மாடுகளைப் பட்டியடிக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது

காட்டோரம் வழியருகே மறைந்திருந்த காட்டு யானை வழி மறித்துத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, திங்கட்கிழமை குடாவெட்டை வயலோரம் நடந்த சம்பவத்தில் பெருமாவெளி ஈரலக்குளம் வாசியான செல்லத்தம்பி என்பவர் அவ்வழியே வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி எலும்புகள் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்

Leave a comment

Your email address will not be published.


*