காத்தான்குடி போது மைதானம் தற்போது விளையாடுவதற்கு முடியாத அளவிற்கு மோசமான ஒரு நிலையில் காணப்படுகின்றது பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

?

?

(ஜுனைட்.எம்.பஹ்த்)

அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை அவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் போல் இருந்து தனது சேவையை வழங்கினார் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பூரண அனுசரணையில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கினால் நாடத்தப்பட்ட அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹ்மத் லப்பைஞாபகார்த்த  A பிரிவு கழகங்களுக்கிடையிலான 2016ஆம் ஆண்டுக்கான நொக்அவுட் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும்பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

?

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இந்த தொடரை நடாத்துவதற்கு என்னிடம் அனுசரணை கேட்ட சகோதரர்கள் இத்தொடரை எனது பெயரிலோ அல்லது எனதுகுடும்பத்தவர்களின் பெயரிலோ நடத்துவதற்கு என்னிடம் அனுமதி கேட்டனர்

??????????????5

இருப்பினும் எமது ஊருக்காக பல்வேறு சேவைகளையும், தியாகங்களையும் செய்துபயங்கரவாதம் எமது பகுதியில் உச்சகட்டத்தில் இருந்த காலப்பகுதிகளில் அமைச்சரவைஅந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் போன்று எமது ஊரை கட்டிக்காத்து இவ்வூருக்காகவே தனது உயிரையும் தியாகம் செய்த மாமனிதர் அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹ்மத் லப்பை அவர்களையும்

DSC_3386

அவர்களின் அளப்பரிய சேவைகளையும் நினைவுபடுத்தும் வகையில் அவர்களின் பெயரில்நடாத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே இத்தொடர் இரண்டாவது முறையாகவும் அஷ் ஷஹீட் அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை அவர்களின் பெயரில் சிறப்பாக நாடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

DSC_3328

எமது ஊரை பொறுத்தவரையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் வெறுமெனே
பொழுதுபோக்கிற்காக மாத்திரம் விளையாடப்படுகின்ற ஒரு விளையாட்டாக மாறி
வருகின்றது. அந்த நிலைமை மாற வேண்டும் இங்கே பல திறமையான வீரர்கள் உள்ளனர்.

DSC_3387
இத்தகைய வீரர்கள் இவ்வாறான உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளோடு மாத்திரம்
நின்றுவிடாமல் மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி எமது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இருப்பினும் பல திறமையான வீரர்கள் தொடர்ந்தும் விளையாடி தமது திறமைகளை
வெளிக்காட்ட அவர்களின் குடும்ப பொருளாதார நிலை அவர்களுக்கு தடையாக அமைகின்றது.

எனவே இதற்காக நாம் ஒரு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அதாவது இவ்வாறன
இளைஞர்களுக்கு அரசினூடாக அல்லது தனியார் துறையஊடாக நிரந்தர தொழில் ஒன்றை
பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்பதற்கும் சந்தர்பத்தை
ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

அதேபோன்று எமது ஊரில் உள்ள ஒரே ஒரு பொதுமைதானமான காத்தான்குடி போது மைதானம் தற்போது விளையாடுவதற்கு முடியாத அளவிற்கு மோசமான ஒரு நிலையில் காணப்படுகின்றது.

எனவே அந்த மைதானத்தை புனரமைப்பதற்காக வேண்டி கௌரவ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களிடம் கேட்ட போதுஅதற்காக 20 லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கி வழங்கியிருக்கின்றார். எனவே மிக விரைவில் மைதானத்தை புனரமைத்து அதனை எமது இளைஞர்கள் விளையாடுவதற்காக
வழங்கவிருக்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் விரைவில் கௌரவ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களை அழைத்து வந்து விளையாட்டுச் சுற்றுப்போட்டி ஒன்றையும் நடாத்தவிருக்கின்றோம்.

தற்போது மிகவும் ஒரு உஷ்ணமான காலநிலை நிலவுவதால் ஒருபொருத்தமான  சந்தர்பத்தில் அந்த விளையாட்டுப் போட்டித் தொடரை நடாத்ததிட்டமிட்டிருக்கின்றோம். அதன் மூலம் எமது வீரர்கள் நேரடியாக பிரதி அமைச்சரைசந்தித்து எங்களுடைய விளையாட்டு துறை சார்ந்த தேவைகளை அவரிடம் எடுத்துக்கூறிவிளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் அவரால் எமது ஊருக்கு என்னென்ன
சேவைகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம் என்று
தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published.


*