சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்சி ஓய்வு

160627053014_lionel_messi_624x351_reuters
தேசிய அணிக்காக மீண்டும் விளையாடப் போவதில்லை என்று அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு நட்சத்திரமான லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.


கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் எதிர்த்து விளையாடிய சிலி அணியிடம் தோல்வியடைந்த பின்னர் அர்ஜென்டினா தொலைக்காட்சியில் பேசியபோது மெஸ்சி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார்.

160627053014_lionel_messi_624x351_reuters

இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலை பெற்ற பிறகு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அடித்த கோல் கணக்கில் சிலி வென்றது.

அவ்வாறு கிடைத்த பெனால்டி முறையில் கோல் அடிக்க தவறிய வீரர்களில் மெஸ்சியும் ஒருவர்

160627071524_lionel_messi_976x549_reuters
இந்த விளையாட்டின் முடிவு போலவே கடந்த ஆண்டு இதே போட்டியின் இறுதி போட்டியும் அமைந்திருந்தது.
மெஸ்சியும், அர்ஜென்டினாவும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கால்பந்து போட்டியிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

b/t

Leave a comment

Your email address will not be published.


*