சவால்கள் நிறைந்த ரியோ ஒலிம்பிக்

140501203037_john_coates_624x351_ap_nocredit

பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளால் இதுவரை நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளிலேயே மிகவும் சிரமமான போட்டியாக ரியோ ஒலிம்பிக் போட்டி உள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

தென் அமெரிக்க கண்டத்தில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்ற முடிவுக்காக ஒலிம்பிக் கமிட்டி வருந்தவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணை தலைவரான ஜான் கோட்ஸ் தாங்கள் எதிர்பார்த்தததை விட இப்பகுதியில் போட்டியை நடத்துவதில் சவால்கள் அதிகம் இருந்ததாக கூறினார்.

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டின் தரம் மற்றும் ரியோ ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா ஏற்பாடுகளை வெகுவாகப் பாராட்டிய கோட்ஸ் போட்டிகளை காண பெரியளவில் கூட்டம் இல்லாதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.

B/T

Leave a comment

Your email address will not be published.


*