சிலியை வீழ்த்தியது ஆர்ஜென்டீனா

coltkn-06-08-fr-04155313448_4385588_07062016_mss_cmy

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டீன அணி 2 –1 என சிலியை தோற்கடித்தது.

அமெரிக்காவில் 45ஆவது கோபா அமெரிக்கா சென்டனரியோ கால்பந்து தொடர் நடைபெற்ற வருகிறது. இதில் பிரேசில், உருகுவே, அர்ஜென்டீனா உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

இதன் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டீனா அணி, ‘நடப்பு சாம்பியன்’ சிலியை சந்தித்தது. அர்ஜென்டீனா தலைவர் மெஸ்சி காயம் (முதுகு வலி) காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் அர்ஜென்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது.

51ஆவது நிமிடத்தில் டி மரியோ ஒரு கோல் அடித்தார். தன் பங்கிற்கு டேவிட் பனேகா (59) ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டீனா 2 –0 என முன்னிலை பெற்றது. சிலி அணி சார்பில் பெட்ரோ மட்டும் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடித்தார். முடிவில், அர்ஜென்டீனா அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published.


*