பங்களாதேஷை வென்றது பாகிஸ்தான்

Pak-600பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஒருநாள் போட்டியொன்றில், பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. 

பேர்மிங்காமில் நேற்று (27) இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 102 (140), இம்ருல் கைஸ் 61 (91), முஷ்பிக்கூர் ரஹீம் 46 (35) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜுனைட் கான் 4, ஹஸன் அலி, ஷடாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலுக்கு, 342 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 49.3 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், ஷொய்ப் மலிக் 72 (66), பாஹிம் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 64 (30), மொஹமட் ஹபீஸ் 49 (62), இமாட் வஸீம் 45 (50), அஹமட் ஷெஷாட் 44 (40) ஓட்டங்களைப் பெற்றனர். 

Pak-600

Leave a comment

Your email address will not be published.


*