படிப்பு தவிர வீரர்களுடைய தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் –

 sanjeev2 (1)ஜெயசூரியம் சஞ்சீவ்

வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் விளையாட்டு என்பது இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும். படிப்பு என்பது தவிரவும்

வீரர்களுடைய தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும்  என மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெயசூரியம் சஞ்சீவ்  தெரிவித்தார்.

sanjeev2 (1)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரான இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை ஏ அணி, இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் கந்துறட்ட மரூண்ஸ் அணிக்காகவும் சம்பியன்ஸ் லீக் போடியில் அதே அணியிலும் 2013 ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார்.

sanjeev

தனது மலேசியப் பயணம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜெயசூரியம் சஞ்சீவ்,

இலங்கை கிரிக்கட் சபைக்கும், மட்டக்களப்பு மாவட்ட கிறிக்கட் சபைக்கும், அதன் தலைவர் பொறியியலாளர் ரி.ரஞ்சன்,  செயலாளர் வி.பிரதீபன், மாவட்ட பயிற்றுவிப்பாளரான அன்வர் தீன்,

மாகாகண பயிற்றுவிப்பாளரான மஞ்சுள கருணாரட்னவுக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் மெதடிஸ்த மத்திய கல்லூரியான என்னுடைய பாடசாலையில் என்னைப் பயிற்றுவித்த அனைத்து பயிற்றுவிப்பாளர்களுக்கும் , பாடசால அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் நன்றிகளையுமு; தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசிய அணியுடனான கிரிக்கட் சுற்றுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது மிகவும் மகிழ்ச்சியானதொரு விடயம்,

வருங்காலத்தில் இதிலிருந்து படிப்படியாக இலங்கை அணிக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நம்புகிறேன். அதற்குரிய பயிற்சிகள் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதற்குரிய முன்னாயத்தமாகத்தான் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

என்னுடைய சிறுவயதில் இருந்த இதற்குரிய பயிற்சிகளைத்தான் மேற்கொண்டிருந்தேன். யுத்தகாலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

அது மாவட்ட பயிற்சியாளர்கள் இல்லாத நிலையில் முன்னணி நிலைகளுக்குச செல்ல முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன்.

தற்போது மாவட்டப் பயிற்றுவிப்பாளர் என்னுடனேயே இருந்து பயிற்சிகளை வழங்கி வருக்கிறார். நான் பின்தங்கினாலும் என்னை ஊக்கப்படுத்தி பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

குடும்படும் என்னுடைய பயிற்றுவிப்பாளருக்குமே இதனுடைய பயன் செல்ல வேண்டும். வடக்குக்கிழக்கைப் பொறுத்தவரையில் விளையாட்டு என்பது இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.

ஆனால் என்னுடைய குடும்பத்தினைப் பொறுத்தவரையில் என்னுடைய முயற்சிகளுக்கு மிகவும் உந்துதலாகவே இருந்து வருகிறார்கள்.

அவ்வாறானதொரு பிள்ளைகளின் விளையாட்டு உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலை என்னுடனேயே மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

வீரர்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான திறமைகள் இருக்கும். என்னுடைய குடும்பத்தினர் குடும்பகாலத்திலும் சரி, இப்போதும் சரி என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் என்னுடைய முதலாவது பயிற்றுவிப்பாளராக இருந்த என்னுடைய சகோதரனுக்கும் நன்றிகளைத் தெரவித்துக் கொள்கிறேன.

படிப்பு என்பது தவிரவும் வீரர்களுடைய தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கிறேன்.

Leave a comment

Your email address will not be published.


*