மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வீடு உடைக்கப்பட்டு தங்க நகைகள், பணம் கொள்ளை

download(ஏறாவூர் நிருபர்.எஸ்.அப்துல் கபூர்)

மட்டக்களப்பு பூம்புகார் பகுதியிலுள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு 40 பவுண் தங்க நகைகள்,

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கேஸ் சிலிண்டர் மற்றும் பிளண்டர் இயந்திரம் ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூம்புகார் ஐந்தாம் குறுக்கு வீதியிலுள்ள இவ்வீட்டின் சமையலறைப் பகுதியூடாக வீட்டுக்குள் நுளைந்த கொள்ளையர்கள் பூட்டினை உடைத்துள்ளதோடு அலுமாரியில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பனவற்றினை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சென்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ள நிலையில் வீடு உடைக்கப்பட்டு தங்க நகைகள், பணம், பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் இன்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார்

குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சம்பத் பெரேரா தலைமையிலான பொலிஸார் இது தொடர்பில் தொடர் விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published.


*