ரியோ ஒலிம்பிக் 2016 ஒரு நுட்பமான அலசல்

160901110725_micphe_950x633_getty_nocredit
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதியன்றுஇ ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் 2016 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றன.


16 நாட்கள் குறிப்பிடத்தக்க வகையில் நடந்த விளையாட்டுப் போட்டிகள்இ இதன் மூலம் முடிவுக்கு வந்தன.

207 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள்இ 31 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். ரியோ போட்டிகளின் போது மொத்தம் 306 வகை பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது; வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடந்த முக்கிய புள்ளிவிவரங்களை பிபிசி விளையாட்டுப் பிரிவு பட்டியலிட்டுள்ளது.

பதக்கப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்த அமெரிக்கா

160901112306_riomedaltamil_624x415__nocredit
43 தங்கப் பதக்கங்களை பெற்றுஇ தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாக பதக்கப் பட்டியலில் முதலிடம் வந்துள்ள அமெரிக்காஇ மொத்தத்தில் இது வரை 17 முறை பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

தங்கள் சொந்த மண்ணில் நடந்த 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 174 பதக்கங்கள் பெற்ற அமெரிக்காஇ அதற்கடுத்து அதிக பதக்கங்களை பெற்றது ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தான். இம்முறை அமெரிக்கா 116 பதக்கங்களை எடுத்துள்ளது.

இந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில்இ ஒலிம்பிக் வரலாற்றில் 1000 தங்கப் பதக்கங்களை கடந்தது மற்றும் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையில் 2500 பதக்கங்களை கடந்தது ஆகிய இரண்டு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.

160901114805_tamilrio2_624x351__nocredit
முதல் முறையாக பதக்கம் வென்ற நாடுகள்

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில்இ மூன்று நாடுகள் தங்களின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றனர்.

ஃபிஜி (ஆண்கள் ரக்பி அணி)இ ஜோர்டான் (ஆண்கள் டேக்வொண்டோ 68 கிலோ எடை பிரிவு) மற்றும் கொசோவோ (பெண்கள் 52 கிலோ எடை ஜோடோ பிரிவு) ஆகிய நாடுகள் முதல் முறையாக தங்கள் நாட்டின் சார்பாக பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்ற அமெரிக்காவின் மூவர் அணி
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்இ அமெரிக்க நீச்சல் வீராங்கனை கேட்டி லிடெக்கி மற்றும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் பிரிவு வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு பல பதக்கங்களை குவித்ததால்இ பதக்க மேடையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது.

160901120830_tamilmedal3_624x624__nocredit
தனது 5-வது ஒலிம்பிக் போட்டியில் 28 பதக்கங்களை வென்று மைக்கேல் பெல்ப்ஸ் சாதனை புரிந்துள்ளார்.

தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் 19 வயதான சிமோன் பைல்ஸ்இ நான்கு தங்கப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று அசாத்திய சாதனை படைத்துள்ளார்.
மீண்டும் சாதித்த மின்னல் வேக உசைன் போல்ட் தனது இறுதி ஒலிம்பிக் போட்டியில்இ அனைத்து கால கட்டத்திலும் மிகச் சிறந்த தடகள வீரர் என்ற தனது சிறப்பை உறுதி செய்யும் விதமாகஇ மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை உசைன் போல்ட் வென்றார்.

ஒலிம்பிக்கில் ”மூன்று – மூன்று” இ அதாவது 100 மீட்டர்இ 200 மீட்டர்இ 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில்இ மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று உசைன் போல்ட் அற்புத சாதனை படைத்துள்ளார்

160901122428_rio4tamil_624x351_bbc
சில குறிப்பிடத்தக்க சாதனைகள்
வில்வித்தை போட்டி பிரிவில் மொத்தமுள்ள நான்கு தங்கப் பதக்கங்களையும் வென்றுஇ அப்பிரிவில் தனது ஆதிக்கத்தை தென்கொரியா நிலைநிறுத்தியுள்ளது.

கடந்த 9 ஒலிம்பிக் போட்டிகளுக்கும் மேலாக வில்வித்தை பிரிவில் வழங்கப்பட்ட 36 தங்கப் பதக்கங்களில்இ தென் கொரியா 23 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் வில்வித்தை விளையாட்டு பிரிவில்இ 76.67மூ. அளவுக்கு தென் கொரியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

160901123327_riotamil5_624x624__nocredit

பிரிட்டன் தடகள வீரர் மோ ஃபாராக்இ 5000 மற்றும் 10இ000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றுஇ தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் “இரு முறை இரட்டை தங்கம்“ வென்றவர் என்ற புகழ் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாகஇ பின்லாந்து வீரர் லாசி விரென் 1972 முனிச் மற்றும் 1976 ஒலிம்பிக் போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார்.

ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் பட்டத்தை தக்க வைத்த முதல் வீரர் என்று பெருமையை பிரிட்டனின் ஆண்டி மர்ரி அடைந்துள்ளார்.

தடகள விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் ஜமைக்காவின் விரைவோட்ட வீராங்கனை எலைன் தாம்சன் வெற்றி பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றார். 1988 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்இ ஃபுளோரன்ஸ் கிரிஃபித் – ஜாய்னர் 28 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய சாதனையை தற்போது எலைன் தாம்சன் சமன் செய்துள்ளார்.

160901130351_riotamil6_624x415__nocredit

sor/b/t sports.

Leave a comment

Your email address will not be published.


*