2016 ஆண்டின் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிய அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம்

DSC_0513சப்னி அஹமட், பைஷல் இஸ்மாயில் 

அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய இறுதி நாள் கிறிக்கெட் சுற்றூப்போட்டி இன்று (30) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் எம்.ஐ முஹம்மட் நபீல் தலைமையில் நடைபெற்றது .


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இச்சுற்றில் வெற்றிபெற்ற அணிக்கு பணப்பரிசிலையும், கிண்ணத்தையும் வழங்கி வைத்தார்.

DSC_0513

அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிகெட் சுற்றுப்போட்டியின் இறுப்போட்டிக்கு அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகமும், ஒலுவில் லோயல் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது.

இச்சுற்றில் சோபர் விளையாட்டுக் கழகம் 2016 ஆம் ஆண்டுடின் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யு.எம்.வாஹிட், சுகாதார அமைச்சரின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், பிரதி சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஏ.எல்.அப்துல் பத்தாஹ், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அம்பாறை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜிதீன், அல் ஜெஸீறா வித்தியாலயத்தின் அதிபரும், ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ், அட்டாளைச்சேனை மரைக்காயர் சபைத் தலைவர் எஸ்.எல்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இக்கழகத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் இக்கழகத்துக்கு கழகத்தின் பெயர் பொரிக்கப்பட்ட அங்கிகளையும் வழங்கிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை மரைக்காயர் சபைத் தலைவர் எஸ்.எல்.எம்.இஸ்மாயில் இந்நிகழ்வின்போது பொண்னாடை போர்த்தி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் கௌரவிக்கப்பட்டார்.

Leave a comment

Your email address will not be published.


*