2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் வெளியீடு… ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் செய்தியையும் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கானச் சின்னம் வெளிக்காட்டுகிறது

160425105611_tokyo_olympic_logo_640x360_tokyo2020_nocredit

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பானியத் தலைநகர் டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் முதலில் வெளியிடப்பட்டவுடன் பெரிய வரவேற்பை பெற்றாலும், பின்னர் சர்ச்சையில் சிக்கியது.

பெல்ஜிய நாடக நிறுவனம் ஒன்றின் சின்னம் போலவே முதலில் வெளியான சின்னம் இருந்தது, அதை உருவாக்கியவர் அடுத்தவருடைய படைப்பை நேர்மையற்ற வகையில் பயன்படுத்துகிறார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

160425105611_tokyo_olympic_logo_640x360_tokyo2020_nocredit

இதையடுத்து டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக்குழு, தேர்தெடுக்கப்பட்ட அந்தச் சின்னத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.

இன்று அப்போட்டிகளுக்கான புதிய சின்னம் வெளியானது. அதில் பல கட்டங்கள் இசைவாக இணைந்து வட்டவடிவமாகவும், பாரலிம்பிக் போட்டிக்கான சின்னத்தில் இடையே ஒரு சிறு இடைவெளியுடனும் காணப்படுகின்றன.

உலகின் பல நாடுகளில் சரித்திரபூர்வமாக சதுரம், செவ்வகம், மற்றும் நாற்கோணங்களைக் கொண்ட வடிவங்கள் பிரபலமாக இருக்கின்றன என போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளின் கலாச்சாரங்கள், சிந்தனைகள் ஆகியவற்றையும் புதிய சின்னம் பிரதிபலிக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் செய்தியையும் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கானச் சின்னம் வெளிக்காட்டுகிறது எனவும் ஜப்பானிய ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் அனைவரும் பங்குபெறும் வகையில் நடத்தப்பட்ட போட்டி ஒன்றின் மூலம் புதிய சின்னம் தேர்தெடுக்கப்பட்டது.

இறுதியாக அசௌ டோகோலோ சமர்ப்பித்திருந்த வடிவம் தேர்தெடுக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.


*