2022 காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியாது – தென்னாப்பிரிக்கா

_95133275_608adad3-5bca-46d6-b88f-c1dd0fdbaf12

காமன்வெல்த் போட்டிகளை நடத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டர்பன் நகரை தேர்ந்தெடுத்துவிட்டாலும் 2022 ஆம் ஆண்டு அங்கு போட்டிகளை நடத்த முடியாது என்று தென்னாப்பிரிக்கா கூறுகிறது.


செலவினங்கள் அதிகரித்து வருவதால் டர்பனுக்கான நிதியுதவியை நீக்குவதாக தென்னாப்பிரிக்க அரசு கூறியதை அடுத்து போட்டிகளை நட்த்துவதில் இருந்து டர்பன் விலகுவதை தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் ஜிடோன் சாம் உறுதிப்படுத்தினார்.

போட்டிகளை நடத்துவதற்கான மாற்று இடங்களை தேர்ந்தெடுப்பதற்காக காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு லண்டனில் கூடுகிறது. போட்டிகளை நடத்துவதில் இருந்து டர்பன் விலகிவிட்டால் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக ஏற்கனவே லிவர்பூல் கூறியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published.


*