செயற்கைக்கோள் சீனாவின் சாதனை முயற்சி

160816131034_china_satellite_afp__512x288_afp_nocredit
கணினி அமைப்பை உடைத்து ஊடுருவ முடியா வண்ணம் பாதுகாப்பான முறையில் செய்திகளை அனுப்பும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை செலுத்தியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் செய்தி நிறுவனமான ஷின்ஹுவா இந்த செயற்கைக்கோள், இடைமறிக்க முடியாத அளவில் அணுவைக் காட்டிலும் சிறிய துகள்களாக, கொத்துக் கொத்தாக தகவல்களை பரிமாறும் எனத் தெரிவித்துள்ளது.

இது எப்படி வேலை செய்கிறது?

மறைக்கப்பட்ட போட்டான்கள் என்று கூறப்படும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் ஒளியின் சிறிய துணை அணுத்துகள்களின் இணைகளை இந்த செயற்கைக்கோள் உருவாக்கும். அந்த இணைகளின் ஒவ்வொரு துகளும் ஒன்று சீனா மற்றொன்று ஆஸ்டிரியா என இரு நாடுகளில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் ஒளிரும்.

இந்த சிறப்பு வகையான லேசர் பல சுவாரஸ்யமான கூறுகளை கொண்டுள்ளது. அதில் ஒன்று, கண்காணிக்கும் செயல்திறன் கொண்டது. இதனுடைய, முக்கியத் தொகுதி நிலையை மாற்றாத வரை, அந்த தொகுதியை கண்காணிக்கவே முடியாது.

எனவே, இந்த தொகுதி நிலையில் அந்த செயற்கைக்கோள் தன்னிச்சையாக பூட்டு ஒன்றைத் தரவேற்றினால், வலையமைப்பில் புகுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

அத்தகைய முயற்சியின்போது செயற்கைக்கோள், அடுத்தடுத்து பூட்டின் தரவை மாற்றி அந்த முயற்சியை பயனற்றதாக்கிவிடும்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் முறைப்படியாக இயங்கினால், மிகப்பாதுகாப்பாக வைத்திருக்கும் ரகசியத் தகவல்களை, வலையமைப்பில் இருந்து திருடப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.

இந்தப் படி நிலைகளுக்குப் பிறகு, ரகசிய செய்திகள் தானாகவே, குறிக்கப்பட்ட இலக்குகளை பாதுகாப்பாக சென்றடைந்துவிடும்.

ஆனால், இந்தத் தொழில்நுட்ப வெற்றியை எட்டுவது அவ்வளவு சுலபமல்ல. இன்னும் பல சோதனைப் படிக்கட்டுகளைக் கடந்தாக வேண்டும்.

செய்திகளை ஒட்டுக்கேட்கும் முயற்சியில் ஈடுபட்டால் அந்தத் தகவல்கள் தானாகவே அழிந்துவிடும்.

இந்த தொழில்நுட்பம் ஆஸ்திரிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது.

இதற்கான செலவு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லாத போதும், இதை உருவாக்குவதற்கான செலவு மட்டும் 100 பில்லியன் டாலருக்கும் அதிகம் என செய்தித்தாள் ஒன்றில் செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a comment

Your email address will not be published.


*