வாட்ஸ்அப்’பை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த தேவையில்லை

ff1cdb56-0304-44ba-8318-490b741d1b0e_S_secvpf

‘வாட்ஸ்அப்’ என்னும் தகவல் தொழில் நுட்பம் உலக நாடுகள் முழுவதும் பரவி தகவல் பரிமாற்றத்தால் முன்னணியில் உள்ளது.

இண்டர் நெட்இ முகநூல் ஆகிய தகவல் பரிமாற்ற வசதிகளை விட இது விரைவில் எளிதாக சென்றடைவதால் உலகளாவிய அளவில் வாட்ஸ்அப்பிற்கு அதிக மவுசு கிடைத்துள்ளது.

 

 

புகைப்படங்கள் அரிய காட்சிகளுடன்இ தகவல்களும் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரிமாறக்கூடிய வசதி இதில் இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக பயன்படுத்துன்கிறனர். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேரை ‘வாட்ஸ்அப்’ கவர்ந்து இழுத்துள்ளது என்றால் மிகையாகாது.

 

 

நகர மக்களை மட்டுமின்றி கிராமங்களையும் இந்த தகவல் தொழில் நுட்பம் மிக எளிதாக சென்றடைவதால் எல்லோரும் ‘வாட்ஸ்அப்’ வசதியைப் பெற ஸ்மார்ட் போனுக்கு மாறி வருகின்றனர்.

 

 

இத்தகைய வசதியை பயன்படுத்த குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 67 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆண்டு சந்தா என்ற வகையில் இதனை பல்வேறு நாடுகளில் உள்ள ‘வாட்ஸ்அப்’ வாடிக்கையாளர்கள் செலுத்தி வருகின்றனர்.

 

 

இந்த நிலையில் உலகம் முழுவதும் கட்டணமின்றி ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்தலாம் என்றும் இதில் விளம்பரங்கள் எதுவும் இடம் பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முக்கிய சாதனமாக திகழும் ‘வாட்ஸ்அப்’பை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

முதல் ஆண்டுக்கு பிறகு குறைந்த அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என ஏற்கனவே ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துவோருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து விட்டதால் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

 

மேலும் இது குறித்து ‘வாட்ஸ்அப்’ இணை நிறுவனர் ஜன்கோப் கூறுகையில்இ ‘வாட்ஸ்அப்’ கட்டணம் செலுத்த பெரும்பாலானவர்களிடம் ‘கிரிடிட் கார்டு’ வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அதனால் சந்தாவாக வசூலிக்கப்படட தொகை இனி வசூலிக்கப்படாது என தெரிவித்தார்.

 

 

இந்த அறிவிப்பையொட்டி ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*