கல்விக்கான ஊக்குவிப்பு நிதி கையளிப்பு

18446690_789276197902012_5795302522904895338_n-ஹம்ஸா கலீல்-

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் தலைவர் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தூர நோக்கு சிந்தனையின் ஒரு திட்டமாக கணவனை இழந்து எவ்வித உதவிகளோ ஆதரவோ இல்லாமல் வாழும் விதவைகளின் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் கல்வி நிலையை ஊக்குவிக்கும் நோக்கில்,

தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 குடும்பங்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புத் தொகையாக குடும்பத்திற்கு 7500 ரூபா வீதம் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் வழங்கி வருகின்றது.

18446690_789276197902012_5795302522904895338_n

அதன் தொடராக ஒரு குடும்பத்திற்கு 22500 வீதம் எதிர் வரும் 3 மாதங்களுக்கான 20 குடும்பங்களினதும் கொடுப்பனவுகள் வங்கி கணக்கு புத்தகத்தில் வைப்பிலிடப்பட்டு அப் புத்தகங்கள் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களால் நேற்று 15.05.2017 உரிய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டது.

18486264_789276131235352_7875816756496151940_n

புதிய காத்தான்குடி அப்றார் மஸ்ஜிதில் நடை பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் கே.எல்.எம் பரீட் அவர்களும், பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

18446540_789276224568676_3458711082827446024_n

Leave a comment

Your email address will not be published.


*