காங்கேயனோடை பிரதேசத்தில் வெள்ள தடுப்பு அணைக்கட்டு திறந்து வைப்பு

image2
புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வருடம் முடிவுருத்தப்பட்ட மண்முனைப்பற்று காங்கேயனோடை பிரதேச வெள்ள தடுப்பு அணைக்கட்டு நேற்று 17.03.2017  வெள்ளிக்கிழமை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்சன யாப்பா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது .


image5
மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த வருடம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினால் சுமார் 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

image2

இதன் போது இந்த அணைக்கட்டு தொடர்சியாக காங்கேயனோடை ஆற்றங்கரை பிரதேசம் முழுவதுமாக கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்ட போது, எதிர்வரும் காலங்களில் இதற்கான நிதியினை கட்டம் கட்டமாக ஒதுக்கீடு செய்து நிறைவேற்றி தருவதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார்.

image1

இந்த நிகழ்வில் அனர்த்த நிவாரண சேவைகள் செயலாளர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய பணிப்பாளர் நாயகம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

image4
இதனை தொடர்ந்து காங்கேயனோடை அல்- அக்ஸா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் கலந்து கொண்டார்கள் இதன் போது வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு அவர்களால் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டமை- குறிப்பிடத்தக்கது.
-ஹம்ஸா கலீல்-

Leave a comment

Your email address will not be published.


*