காத்தான்குடியில் பாரிய அபிவிருத்திப் பணிகள்! ஹிஸ்புல்லாஹ் நேரடியாகச் சென்று கண்காணிப்பு

06cafc77-2e62-43e5-b80b-ecbd2c8bae08
மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாரிய அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேலைத்திட்டங்களை துரிதமாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தார்.

8abaab0b-29c8-4e5e-847f-6756475479c1

நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி அழகுப் படுத்தும் வேலைத்திட்டம் சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் 15.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலய கட்டிட புனர்நிர்மாணம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வாவிக்கரை வீதி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

7e620350-da30-4b42-b35a-543adff56fe3
இந்நிலையில் இந்த அபிவிருத்திப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஊர் வீதி காபட் இடும் பணிகளையும் அதன் வடிகால் திருத்தப் பணிகளையும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

95cfba2c-cf30-41c7-93be-ff115411e0cc
விளையாட்டுத்துறை அமைச்சின் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வாவிக்கரை வீதி மைதான நிர்மாண பணிகளை பார்வையிட்டதுடன்இ அதன் அடுத்த கட்ட பணிகளுக்கு மேலும் 5 மில்லியன் ரூபா நிதியினை தனது அமைச்சினால் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

9369b43c-1793-40f6-996d-63c48044cfae
பின்னர்இ காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்துக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்இ அங்கு தனது அமைச்சின் 15.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்ற கட்டிட பணிகளை பார்வையிட்டதோடுஇ கட்டிட வேலைகளை பூரணப்படுத்த தேவைப்படும் மேலதிக நிதியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.

2e631181-d645-436b-8b48-5ec7bc567a86
இதேவேளைஇ நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி அழகுப்படுத்தும் பணிகளையும் இதன் போது இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார். அத்துடன் அங்கு நடைபாதை இளைப்பாரும் கதிரைகள் அமைப்பதை துரிதப்படுத்துமாறும் அதனை அமைச்சர் சம்பிக்க ரணவக்க விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

c44feee9-790e-4498-9dce-c68c982b0506
அத்துடன் காத்தான்குடி கடற்கரை ஓரமாக சுமார் 10 அடி உயரமான தென்னை மரங்களை நடுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவும் மத்திய வீதி சுற்றுவட்டத்தில் ஈத்தப்பழம் மரம் நடுவது சம்பந்தமாகவும் இதன் போது ஆராயப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.a16b9ad6-012a-46f0-897e-3eed92625054

c09a0d26-d0d7-4e07-825b-096bc6fd9702a5eee8f9-d327-421f-a67b-4034b2b7b42d

Leave a comment

Your email address will not be published.


*