காத்தான்குடி செய்ன் மௌலானா , புதிய காத்தான்குடி மனாருல் ஹுதா பள்ளிவாயல் என்பவற்றுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி உதவி

unnamed

காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாயலின் அபிவிருத்தி மற்றும் கட்டிட நிர்மாணப்பணிகளக்காக 20 இலட்சம் ரூபாய் நிதி   புணர்வாழ்வு மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கப்பட்டள்ளது.

காத்தான்குடியில் பதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும்  அஸ்ஸெய்யிது ஸெய்ன் மௌலானா  பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பள்ளிவாயல்  கட்டிட பணிக்காக  உதவி வழங்குமாறு  நிருவாகத்தினர் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

unnamed (3)

அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இராஜாங்க அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து பள்ளிவாயல் கட்டட நிருமாணப்பணிகளுக்கு முதற்கட்டமாக 15 இலட்சம் ரூபாய் நிதியினை (15.03.2017 புதன்கிழமை) பள்ளிவாயல் நிர்வாகத்திடம் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் உறுப்பினர்களின் ஊடாக கையளித்தார்.

unnamed (1)

இதே வேளை புதிய காத்தான்குடி மனாருல் ஹுதா பள்ளிவாயல் பெண்கள் தொழுகை அறை மற்றும் அல் குர்ஆன் மதரசா புனர் நிர்மாணப்பணிகளுக்காக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டள்ளது .

இந்நிதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் முஹம்மட் சப்ரி அவர்களால் மனாருல் ஹுதா பள்ளிவாயல் தலைவர் மௌலவி அஜ்வத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

unnamed (2)

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினர், ஜமாஅத்தார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-ஹம்ஸா கலீல்-

Leave a comment

Your email address will not be published.


*