துவிச்சக்கர வண்டி திருத்தும் தொழிலாளிக்கு  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறுகினால் இயந்திரம் வழங்கி வைப்பு

HRS_0691

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் துவிச்சக்கர வண்டி திருத்தும் தொழிலில் ஈடுபடும் நபர் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் முகமாக Air Compressor and Tyre Inflating Gun equipment (வளி அமுக்கி மற்றும் காற்று அதிகரிக்கும் இயந்திரம்) உபகரணம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

முதுமை மற்றும் உடல் சுகயீனம் போன்றவற்றிற்கு மத்தியில் தனது குடும்ப வருமானத்திற்காக துவிச்சக்கர வண்டி திருத்தும் தொழிலினை மேற்கொண்டுவந்த குறித்த நபர் தன்னுடைய மிகக் குறைந்த வருமானத்தில் தனது சுய தொழிலுக்கான போதியளவான உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாமையினால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலே தன்னுடைய சுய தொழிலை முன்னேடுத்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய சுய தொழிலினை மேம்படுத்துவதற்காக Air Compressor and Tyre Inflating Gun equipment உபகரணம் ஒன்றினை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளல் ஷிப்லி பாறுக்கிடம் குறித்த நபர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தார். 

அதற்கமைவாக தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வியந்திரத்தினை பெற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த துவிச்சக்கர வண்டி திருத்தும் தொழிலாளிக்கு  2017.03.16ஆந்திகதி-வியாழக்கிழமை நேரடியாகச் சென்று  கையளித்தார்.  

HRS_0691

Leave a comment

Your email address will not be published.


*