போலி முகநூல் தொடர்பில் கோறளைப்பற்று மேற்கு முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் பொலிஸில் முறைப்பாடு

KBSKbs Hameed எனும் பெயரில் இயக்கப்படும் முகநூலுக்கும் எனக்கும் எதுவிதமான சம்மந்தமும் இல்லை என முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட்  தனது மறுப்பறிக்கையினை  வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்………….. 

என்னுடைய பெயரில் Kbs Hameed எனும் முகநூல் ஒன்று எனது புகைப்படத்துடன் சில மாத காலங்கள் தொட்டு இன்றுவரை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த முகநூலுக்கும் எனக்கும் எதுவிதமான சம்மந்தமும் இல்லை என கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் என்னுடைய பெயரில் இயக்கப்படும் Sahul Hameed எனும் முகநூல் மாத்திரமே தனக்கு சொந்தமானது என்றும் அதற்கு மாத்திரம்தான் நான் உரிமையுடையவன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook

Kbs Hameed எனும் போலி முகநூலில் நான் எழுதுவது போன்று சில சகோதரர்களை வாழ்த்தியும், பிறரை இழிவு படுத்தியும் பதிவுகள் இடப்படுவதோடு, இணையத்தளங்களில் நான் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் செய்திகளுடன் இணைந்த எனது புகைப்படங்கள் மற்றும் பிறருடைய முகநூலில் காணப்படும் ஏனைய எனது புகைப்படங்களையும் வைத்தே இந்த போலி முகநூல் எனது பெயரில் இயக்கப்படுகின்றது என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்போலி முகநூல் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது விடயமாக நான் சில தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளேன்.

எனவே. இவ்வாறு என்னுடைய பெயரில் இப்போலி முகநூலை இயக்கும் நபரைப்பற்றிய தகவல்கள் ஏதும் ஊர்ஜிதப்படுத்தப்படும் வகையில் உங்களுக்கு தெரிய வந்தால் அதனை என்னிடமோ அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கே.பீ.எஸ். ஹமீட்
தவிசாளர்,
வீடமைப்பு அதிகார சபை. கிழக்கு மாகாணம்.

Leave a comment

Your email address will not be published.


*