ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையம்பேஸ்புக்கின் கனவுத்திட்டம்

160721224219_facebook_drone_640x360_drone_nocredit
உலகின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு முக்கியமாக இந்தியா மற்றும் ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளில், இணையதள சேவையை வழங்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஒரு திட்டத்தின் மூலம் பெரிய அடியை முன்னெடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளது.


முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், ஒருநாள் வானிலிருந்து இணையதள சிக்னல்களை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்புகிறது.

தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது.

பிரிட்டிஷ் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளது.

ஆனால், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை இயக்க, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பெரிய அளவில் முன்னேற்றங்கள் என்று சமூக ஊடகத்தின் மிகப் பெரிய நிறுவனமான பேஸ்புக் கூறியுள்ளது.

இதே போன்ற திட்டத்தை செயல்படுத்துவதில் கூகுள் நிறுவனமும் பணியாற்றி வருகிறது.

i/b

Leave a comment

Your email address will not be published.


*