இந்திய எல்லை நிலவரம்: மோடி தலைமையில் அவசர ஆலோசனை

Modi-US_2126610f_3032264f
எல்லையில் துல்லிய திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பின் நிலவும் சூழல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு துறையின் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு நிலவரம்இ இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கடந்த 28-ம் தேதி இரவில் எல்லையில் இந்திய ராணுவம் துல்லிய திடீர் தாக்குதல் நடத்திய பின்னர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சகம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

so/tt

Leave a comment

Your email address will not be published.


*