ஒமர் ஷிஷானியின் மரணத்தை உறுதி செய்தது ஐ.எஸ் இயக்கம்

160713212140_omar_shishani_died_in_islamic_state_afp_640x360_afp

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத இயக்கத்துக்கு நெருக்கமான செய்தி முகாமையொன்று, அதன் முக்கிய தளபதி ஒமர் ஷிஷானி உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது.


இவரை கடந்த மார்ச் மாதம் தாங்கள் கொன்றதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இராக்கின் தெற்கு மொசூல் பகுதியில் உள்ள ஷிர்காட் நகரில் நடந்த போரில் ஷிஷானி கொல்லப்பட்டதாக ‘அமாக்’ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வட கிழக்கு சிரியாவில் தாங்கள் நடத்திய வான் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக ஷிஷானி உயிரிழந்ததாக, கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க ராணுவப் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் கூறியிருந்தது.

ஷிஷானியின் இயற்பெயர் டார்கான் பாட்டிராஷ்விலி ஆகும். ஆனால், அவர் ஒமர் செச்சன் என்றும் அழைக்கப்படுகிறார்.

b/t

 

Leave a comment

Your email address will not be published.


*