பறக்கும் விமானத்திலும் பாலியல் தொல்லை

www.vinavu.comflight-d61cb966089ac165fb7b6d9551d1c1d28c2c7331

டுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கூட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. அதே விமானத்தில் அருகில் பயணித்த 31 வயதுடைய ஆண் ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடன்றி சுய இன்பமும் செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரிலிருந்து மும்பை நோக்கி 30.06.2017 அன்று காலை 6.30 மணிக்குப் புறப்பட்ட விமானம் மும்பையை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் 31 வயதுடைய சபீன் ஹம்சா அருகிலிருந்த பெண் பயணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதையுணர்ந்து அவரைச் சீண்ட ஆரம்பித்துள்ளார்; திடீரென அந்தப் பெண் விழித்துப் பார்க்கும்போது அவன் சுய இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது, உடனடியாக அபாய எச்சரிக்கை மணியை அழுத்தியுள்ளார். விரைந்து வந்த விமானப் பணியாளர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் போது பேண்ட் ஜிப்பை சரிசெய்து கொண்டே தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாதிட்டுள்ளார் அந்தக் காமுகன். இதையடுத்து விமானப் பணியாளர்கள் போலீசுக்குத் தகவல் தரவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்ற ஒரு சம்பவம் இதற்கு 10 நாட்களுக்கு முன்னரும் நடந்துள்ளது. ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் 56 வயது காமுகர் ஒருவர் 44 வயது பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடன்றி சுய இன்பமும் அனுபவித்துள்ளார். இத்தனைக்கும் அந்தப் பெண்மணி புகார் கொடுத்து விடுவேன் என்று பலமுறை எச்சரித்தும் அது குறித்து கொஞ்சம் கூட கவலையின்றி மேலும் தொந்தரவு கொடுத்துள்ளார் அந்த காமாந்திரக் கனவான். இறுதியில் அந்தப் பெண் புகார் கொடுக்கவே அவர் கைது செய்யப்பட்டு இப்போது பிணையிலும் வந்துவிட்டார்.

விமானப் பயணம் என்பது எப்படிப் பார்த்தாலும் சாமானிய மக்களுக்கு இல்லை. சாமானிய மக்கள் பயணிக்கும் பேருந்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

Leave a comment

Your email address will not be published.


*