Breaking News

பிரிட்டன் நாடளுமன்ற தாக்குதல்: இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு லண்டன் போலீசார் தெரிவிப்பு

_95279645_policeman_epa

பிரிட்டன் நாடளுமன்ற தாக்குதல்: இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு லண்டன் போலீசார் நேற்று (புதன்கிழமை) வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே நடந்த தாக்குதல்களுடன் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம்பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: படங்களில் தாக்குதல்தாரியின் அடையாளத்தை தாங்கள் அறிந்திருப்பதாகவே கருதுவதாக தெரிவித்த லண்டன் பெருநகர பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி இது குறித்து மேலதிக தகவல்களை தெரிவிக்கவில்லை.

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது ஒரு கார் மோதிய போது மூவர் கொல்லப்பட்டுட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பின்னர் காரில் இருந்த அந்த தாக்குதல்தாரி நாடாளுமன்ற வளாக மைதானத்துக்கு சென்று தான் சுடப்படுவதற்கு முன்னர் அங்கு இருந்த ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்தினார்.

இந்த தாக்குதலை ஆரோக்கியமற்ற மற்றும் இழிவான தாக்குதல் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வர்ணித்துள்ளார்.

sor/bt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

HRS_6029

பொறியிலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி, ஆரயம்பதி இரு நகரங்களுக்கான எல்லை வீதி காபட் வீதியாக புனரமைக்க நிதிஒதுக்கீடு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி தெற்கு எல்லை வீதி முற்றுமுழுதாக காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.