மும்பையில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டடம்: 7 பேர் பலி

_97610571_img-20170831-wa0002
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மும்பையில் ஒரு ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர்.


இன்று (புதன்கிழமை) இந்திய நேரப்படி 8.40 மணிக்கு இந்த குடியிருப்பு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

மேலும்இ கட்டட ஈடுபாடுகளுக்குள் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியை மீட்பு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த பெண்டி பஜார் பகுதியில் உள்ள இந்த கட்டடம் 100 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்று நம்பப்படுகிறது.

ஆம்புலன்ஸ்கள்இ தீயணைப்பு வண்டிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் படை ஊழியர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியில் மீட்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியா எங்கும் ஓவ்வொரு ஆண்டும் கட்டடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களில் பல டஜன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்.

_97610571_img-20170831-wa0002

sor/b/t

Leave a comment

Your email address will not be published.


*