ஷியா தலைவரின் குடியுரிமை பறிப்புக்கு எதிராக பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம்

160620170052_bahrain_cleric_isa_qassim_512x288_bbc_nocredit
பஹ்ரைனின் முன்னணி ஷியா பிரிவு தலைவரான, ஷேக் இஸா காசீமின் குடியுரிமையை அரசு பறித்ததை அடுத்து, அவரது வீட்டின் முன்னர் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.


மன்னர் ஹமத் பின் இஸா அல்-கலிஃபா தலைமையிலான சுன்னி முடியாட்சிக்கும் அவரது அரசுக்கும் எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னதாக ஆர்ப்பாட்டங்கள் எதையும் நடத்துவதற்கு எதிராக நாட்டின் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஷேக் இஸா காசிம் மதக்குழுவாதத்தையும், வன்முறையையும் ஊக்குவிப்பதாக பஹ்ரைன் ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஈரானின் பிரபல தளபதி, காசிம் சொலைமானி, இந்த முடிவினால் ஆத்திரமடைந்திருக்கும் பஹ்ரைனியர்களிடமிருந்து ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு வரக்கூடும் என்று சூசகமாகக்  சுட்டிக்காட்டியிருந்தார்.

s/bt

Leave a comment

Your email address will not be published.


*